அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் சபையில் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஒருவரும் இணைந்து முன்வைத்துள்ளனர். இந்தத் தீர்மானத்துக்குக் காங்கிரஸ் சபையில் நிறைய ஆதரவு தேவை. நீங்களும் இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு உதவலாம்.

Re: Requesting support of Members of Congress to Co-Sponsor House Resolution 413.

H.Res.413 – Recognizing 12 years since the end of the war in Sri Lanka on May 18, 2009, honoring the lives lost, and expressing support for justice, accountability, reconciliation, reconstruction, reparation, and reform in Sri Lanka to ensure a lasting peaceful political solution and a prosperous future for all people of Sri Lanka.

Congresswoman Deborah  Ross (D-NC), the Co-Chairs of the Congressional Caucus on Ethnic & Religious Freedom in Sri Lanka,  Rep. Brad Sherman, Chair of the South Asia Subcommittee and Kathy Manning (D-NC, HFAC) introduced a resolution honoring the 12th anniversary of the end of the war in  Mullivaikal ,Sri Lanka on Wednesday, May 18.  They are actively looking for cosponsors. 

Got Questions? email us: hres413@tamilmedia.org

Please send the draft email below, to your Member of Congress & follow up regularly with phone calls/emails/asking your friends to do the same.

நீங்கள் செய்யவேண்டியவை / Action Item for you (It takes 5 minutes):

  • Please search your Congress Representative’s contact information by entering your zip code in www.house.gov
  • Copy & Paste the following Sample text/draft Letter/edit it to personalize it to message your Congress Representative (Please note that, in this process,  some of the Government Websites need a 4 digit Zip extension for your address. You may find it by googling your address and keyword “zip extension”)
  • The more cosponsors, the stronger the message, so make sure your Member of Congress signs on!

Locate your Senators and Representative

ex: 1600 Pennsylvania Ave, Washington, DC 20500

You can find member of Congress for any zip code using the following link.
For example, my zip code is 94568
https://ziplook.house.gov/htbin/findrep_house?ZIP=94568

தங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் கொண்டு சேர்க்கவும். நன்றி!

Sample text/draft letter:

The Honorable (First Name) (Last name)
U. S.  House of Representatives,
Washington, DC 20515
 
Dear Representative (Last Name),
 
H.Res. 413 was introduced on May 18 by Rep. Deborah Ross (D-NC) to commemorate the 12th anniversary of the end of the war in Sri Lanka in 2009 and to ask for stronger US action on reform & accountability on Sri Lanka.
 
https://www.congress.gov/bill/117th-congress/house-resolution/413/all-info?r=1&s=1
 
Reps. Danny Davis (D-IL) & Bill Johnson (R-OH), Co-Chairs of the Caucus on Religious & Ethnic Freedom in Sri Lanka, Brad Sherman (D-CA, Chair of the South Asia Subcommittee) and Kathy Manning (D-NC, HFAC) are original co-sponsors.
 
I hope you will co-sponsor this bipartisan resolution to honor the 12th Anniversary and to note how much progress toward real peace, equality and justice remains to be achieved.

Please contact: Katie Paulson  Katie.Paulson@mail.house.gov 202-225-3032 in Rep. Ross’s office, Laura.Wilson@mail.house.gov 202-225-5705 in Rep. Johnson’s office to co-sponsor.

Sincerely,
XXX
Your name
Your address
Your phone number


More Information on the resolution

இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் தீர்மானம் (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
Click here to see the original Resolution: 
https://www.congress.gov/bill/117th-congress/house-resolution/413/text?r=1
117 வது காங்கிரஸ்1 வது அமர்வுH. RES. 413

மே 18, 2009 அன்று இலங்கையில் போர் முடிவடைந்து 1) 12 ஆண்டுகளை ஒப்புக்கொள்தல், 2) போரில் உயிரிழந்தவர்களை சிறப்பித்தல் மற்றும் 3) நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காகவும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் இலங்கையில் நீதி, போர்க்குற்றத்திற்கான பொறுப்பேற்றல், நல்லிணக்கம், மறுசீரமைப்பு, இழப்பீடு, சீர்திருத்தம் ஆகியவற்றை நிலைநாட்ட வலியுறுத்தி ஆதரவு தெரிவித்தல், 


IN THE HOUSE OF REPRESENTATIVES

திருமதி ரோஸ் (தனக்காகவும் மற்றும் ஓகாயோவின் திரு. ஜான்சன் , இல்லினாய்ஸின் திரு. டேனி கே. டேவிஸ் , திரு. ஷெர்மன், திருமதி மானிங் ஆகியோருக்காகவும்) பின்வரும் தீர்மானத்தை அளித்தார்; இது வெளியுறவு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


RESOLUTION

மே 18, 2009 அன்று இலங்கையில் போர் முடிவடைந்து 1) 12 ஆண்டுகளை ஒப்புக்கொள்தல், 2) போரில் உயிரிழந்தவர்களை சிறப்பித்தல் மற்றும் 3) நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காகவும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் இலங்கையில் நீதி, போர்க்குற்றத்திற்கான பொறுப்பேற்றல், நல்லிணக்கம், மறுசீரமைப்பு, இழப்பீடு, சீர்திருத்தம் ஆகியவற்றை நிலைநாட்ட வலியுறுத்தி ஆதரவு தெரிவித்தல், 
 

அதேநேரம் 2021 மே 18, இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) உட்பட பல்வேறு ஆயுதமேந்திய தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போர்  முடிவின் 12 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது;

அதேநேரம் உள்நாட்டுப் போரின்போது அனைத்து சமூகங்களும் வன்முறையாலும், அதற்கான எதிர்வினையாலும் துன்புற்றன;

அதேநேரம் இலங்கையின் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான மரணங்களாலும், காணாமல் போனவர்களாலும், கொடுங்கோலாலும், இடப்பெயர்வுகளாலும் துன்புற்றனர்;

அதேநேரம் போரின்போதும் போருக்குப் பிறகும் நடந்த கடுமையான குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு தனது Lessons Learned and Reconciliation Commission பரிந்துரைத்தபடி நடவடிக்கை எடுக்கத் தவறியதாலும் அல்லது நம்பகமான நீதிமுறை வழங்கும் அமைப்பை அமைக்கத் தவறியதாலும், முன்பு எப்போதைவிடவும் வலுவான உள்நாட்டு நடவடிக்கையையும்  நல்லிணக்கத்தையும் கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் பேரவையில் 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா முன்னெடுத்தது. 

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OISL அறிக்கை) 2015 ல் வெளியிட்ட ஒரு அறிக்கை,  போர்க்குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும், இலங்கையில் போரின்போது உலகளாவிய மனித உரிமை சட்ட மீறல்களையும் கோடிட்டுக் காட்டியது;

அதேநேரம் இலங்கையில் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம், OISL அறிக்கை வெளியீடு மற்றும் மனித உரிமைகள் உயர் ஆணையரின் பரிந்துரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, 2015 இல் போடப்பட்டு பின்பு 2017 இல் உறுதிப்படுத்தப்பட்ட UNHRC தீர்மானம் HRC 30/1 -க்கு  அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து ஆதரவளித்தது;

அதேநேரம் HRC 30/1-இன் கீழ், இலங்கை அரசாங்கம் போருக்குப் பிந்தைய நல்லிணக்கத்திற்கான இடைக்கால நீதியளிக்கும் கடமைகளைச் செய்தது. அவற்றுள் கீழ்க்கண்டவைகளும் அடக்கம்:


(1) காமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய  சிறப்பு நீதிமன்றத்துடன் கூடிய பொறுப்பேற்கும் வழிமுறை;
(2) ஒரு உண்மை ஆணையம் (a truth commission);
(3) காணாமல் போனவர்களின் அலுவலகம் (an office of missing persons);
(4) இழப்பீடு மற்றும் அரசு நிறுவனக்கட்டமைப்பு சீர்திருத்த அலுவலகம்;
(5) நம்பிக்கையை வளர்க்கும் பல நடவடிக்கைகள்;

அதேநேரம் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களையும், 2019 நவம்பரில் ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் நிறுவியதையும் தொடர்ந்து இலங்கை HRC 30/1 இலிருந்து விலகியது;

அதேநேரம் மிகவும் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு போர்வீரர் என்ற வகையில் நாட்டின் வடகிழக்குப் பகுதி, வழிவழியாக தமிழரின் தாய்மண், பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது; 

அதேநேரம் ஆயுதப்போராட்டத்தின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த உலகளாவிய விசாரணைக்காகவும், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு நிலையான அரசியல் தீர்வை வளர்த்தெடுக்க ஐ.நா.வால்  கண்காணிக்கப்படும் வாக்கெடுப்புக்காகவும் அழைப்பு விடுத்த தீர்மானங்களை இலங்கையின் வடக்கு மாகாண சபை ஏற்றுக்கொண்டது; 

அதேநேரம் இலங்கை அரசு பல ஆண்டுகளாக மாகாணத் தேர்தல்களை ஒத்திவைத்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களின் உள்ளூர் பிரதிநிதித்துவத்திற்கான ஜனநாயக உரிமையை மறுக்கிறது;

அதேநேரம் இலங்கையின் கோவிட்-19 எதிர்வினைகள் இராணுவத்தால் வழிநடத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது மாநில கண்காணிப்பு (state surveillance), துன்புறுத்தல் (harassment), தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு எதிரான பாகுபாடு (discrimination) ஆகியவை தொடர்பான நீண்டகால கவலைகளை அதிகரிக்கிறது;

அதேநேரம் கடந்த ஆண்டு  கீழ்கண்டவற்றுக்குப் பின்னால் இலங்கை அரசாங்கம் இருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையரின்  2021 அறிக்கை கண்டறிந்துள்ளது.
(1) போர்க்குற்றங்களில் சிக்கியுள்ள பலரும் உயர்மட்ட அரசாங்க பதவிகளுக்கு உயர்த்தப்பட்டிருப்பது;
(2) தண்டனை பெற்ற போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பது;
(3) குறிப்பிடத்தக்க ஜனநாயக சீர்திருத்தங்களை மாற்றியமைத்து, ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை பலப்படுத்தியிருப்பது;
(4) போர்க்குற்றங்களைச் செய்தவர்களை விசாரித்து வழக்குத் தொடரும் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளது;
(5) பெரும்பான்மைவாதமும், பிரிவினைவாதமும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது;
(6) பொதுநல சமூக அமைப்புகளின் மீதும்  மனித உரிமை ஆதரவாளர்களின் மீதும் கண்காணிப்பும் துன்புறுத்தலும் ஏவப்பட்டிருப்பது;
(7) எதிர்ப்பவர்களை கடத்தி சித்திரவதை செய்ய பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு;

அதேநேரம் “கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் கொள்கைகளும் நடைமுறைகளும் மீண்டும் நிகழவைப்பதற்கான அறிகுறிகளையே இலங்கையின் தற்போதைய பாதை காட்டுகிறது” என்று அறிக்கை எச்சரிக்கிறது;

அதேநேரம் இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கும், உலகளாவிய மனித உரிமைச் சட்ட மீறல்களுக்குமான பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போக்கை அடையாளங்காட்டுவதோடு, வருங்காலத்தில் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கும் வகையில் செயல்பாடுகளை அமைக்கத் தேவையான தகவல்களையும் சான்றுகளையும் திரட்டி ஆராய்ந்து பாதுகாக்க மனித உரிமை உயர் ஆணையர் (United Nations High Commissioner for Human Rights) அலுவலகத்தை வழிநடத்தும் United Kingdom-ன் UNHRC தீர்மானம் HRC 46/1 (2021)-க்கு அமெரிக்கா United Kingdom உடன் சேர்ந்து ஆதரவளித்துள்ளது.

அதேநேரம் போர்க்குற்றங்களுக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுபவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றாலும், அடையாள வழக்குகள் குறித்து கூட எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை; தன்னிச்சையான சிறைபிடித்தல்கள், அரசின் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மூலம் சான்றுகளைத் திரட்டுவது தடைபட்டுள்ளது; மற்றும் எந்த உலகத்தரத்துக்கும் இணங்காத வகையிலும், அரசால் பலமுறை உறுதியளிக்கப்பட்டும் நீக்கப்படாமலிருக்கும் பழைய இற்றுப்போன கடுமையான தீவிரவாதத் தடுப்புச் சட்டங்கள் மூலம் போர்க்குற்றங்களுக்கு தண்டனையின்மை நாட்டில் நிலவுகிறது.  

அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர் ஆணையர் (United Nations High Commissioner for Human Rights) மைக்கேல் பேச்லெட் (Michelle Bachelet) ஜனவரி 2021 இல் கூறியதாவது, “தேசிய அளவில் பொறுப்புணர்வை முன்னெடுக்க அரசாங்கத்தின் இயலாமையையும், விருப்பமின்மையையும் கருத்தில் கொண்டு சர்வதேச குற்றங்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான சர்வதேச நடவடிக்கைக்கான நேரம் இது. உலகளாவிய அதிகார வரம்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் கீழ், உலக நாடுகள் தங்கள் தேசிய நீதிமன்றங்களில் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த சர்வதேச குற்றங்கள் மீது விசாரணைகளையும் வழக்குகளையும் தொடர வேண்டும்”;

அதேநேரம் ஆயுதப்போராட்டத்தின்போது  காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தங்களின் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை; ஆயுதப்போராட்டத்தின் முடிவில் அரசாங்கத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல்களும் வெளியிடப்படவில்லை; 

அதேநேரம் போராட்டத்தின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளில் உள்நாடு, சர்வதேச விசாரணைகளின் முன்னேற்றமும், நல்லிணக்கத்தை மேம்படுத்துதலும் இடம்பெறுவது இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டிற்கும் முதலீட்டிற்கும் உதவுவதோடு சர்வதேச சட்டங்களுக்கான ஆதரவையும் நிறுவும். அதனால், இப்பொழுது அப்படியே ஆகட்டும்;

தீர்க்கப்பட்டது (Resolved) யாதெனில், பிரதிநிதிகள் சபை (the House of Representatives) —

(1) இலங்கையில் போர் முடிவடைந்த 12 வது ஆண்டு நிறைவை ஒப்புக்கொள்வதோடு போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது;

(2) இறந்தவர்களை நினைவுகூர்ந்து சிறப்பிப்பதோடு, நல்லிணக்கம், மறுசீரமைப்பு, இழப்பீடு, சீர்திருத்தத்தம் ஆகியவற்றுக்கான தேடலில் இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுடனான அதன் ஒருமித்த பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது;

(3) இலங்கை அரசின் தள்ளியது இல்லாமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சான்றுகளை  திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்ததற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை (United Nations Human Rights Council) பாராட்டுகிறது;

(4) ஆர்ப்பாட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் சில சமயங்களில் மிரட்டல்களையும், துன்புறுத்தல்களையும், அரசாங்க பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட பின்பும், காணாமல் போனவர்களின் தமிழ் குடும்பங்கள் உட்பட இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்குமான நீதிவேண்டுபவர்களின் துணிச்சலையும் ஈடுபாட்டையும் அங்கீகரிக்கிறது;

(5) இலங்கையின் வரலாற்று அடிப்படையில் ஒடுக்கப்பட்ட வடகிழக்கு பகுதியின் அரசியல் உரிமைகளுக்காகவும் (rights) ஒருமுகப்படுத்துவற்காகவும் (representation) குரல் கொடுக்கவும் பாதுகாக்கவும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதோடு, இன மோதலுக்கு வழிவகுத்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

(6) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர் ஆணையரின் (United Nations High Commissioner for Human Rights) பரிந்துரைகளுக்கு இணங்க விசாரணைகளையும் வழக்குகளையும் ஆராய அமெரிக்கா பரிந்துரைக்கிறது; 

(7) இலங்கையில் போரின்போது நடைபெற்ற கடுமையான குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்கும் வகையில், நம்பகத் தன்மையுடன் பயனுள்ள சர்வதேச நடைமுறையை நிறுவ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (United Nations General Assembly), ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை (United Nations Security Council) மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (United Nations Human Rights Council) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்காவை வலியுறுத்துகிறது.

Got Questions? email us: hres413@tamilmedia.org