Loading Events

« All Events

  • This event has passed.

கவிஞர் கலாப்ரியா – படைப்பாளர் உலகம்

August 7 @ 6:30 pm - 7:30 pm PDT

படைப்பாளர் உலகம்

சிறப்பு விருந்தினர்: “கவிஞர் கலாப்ரியா”

To Join the zoom meeting: https://us02web.zoom.us/j/87316043344

சனிக்கிழமை ஆகஸ்ட் 7, 2021 பிற்பகல் 6:30 மணி பசிபிக் நேரம்
சனிக்கிழமை ஆகஸ்ட் 7, 2021 இரவு 9:30 மணி கிழக்கு நேரம்
ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 8, 2021 காலை 7 மணி இந்திய நேரம்

Zoom Meeting ID: 87316043344 அல்லது
http://Tamilmedia.org/events வழியாக,

பசிபிக் நேரம் ஆகஸ்ட் 7, சனிக்கிழமை இரவு 6.30 மணிக்கு…

அமெரிக்கத் தமிழ் ஊடகம், படைப்பாளர் உலகம் நிகழ்வின் இந்த மாத சிறப்பு விருந்தினர், கவிஞர் கலாப்ரியா அவர்கள்!

கவிதையில் தனிச்சிறப்பானதொரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர், கவிஞர் கலாப்ரியா. 1968 இல் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக 24 கவிதைத் தொகுதிகள், (மூன்று மொத்தக் கவிதைகள் –காவ்யா 1994. தமிழினி 2000, சந்தியா பதிப்பகம் 2010 நீங்கலாக) இலக்கியக் கட்டுரைகள் 4, தன் வரலாற்றுப் புனைவு 5, தமிழ்சினிமா வரலாறு 3 என 12 உரைநடை நூல்கள், மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு என மொத்தம் 40 நூல்கள் எழுதி இருக்கிறார். சமீபத்தில் அவர் எழுதி வரும் மாக்காளை தொடர் இருபதாயிரம் வாசகர்களைக் கவர்ந்து விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. இயல்பான பேச்சுமொழியிலான உரையாடல்களையும் குறுங்கதைகளையும் கவிதைக்குள் லாகவமாக கையாள்பவர் கவிஞர் கலாப்ரியா. அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது “கலாப்ரியா”வனார்.

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை – கலாப்ரியா !

தமிழக அரசின் கலைமாமணி விருது, கவிஞர் சிற்பி இலக்கிய விருது, ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை, சிறந்த கட்டுரைத் தொகுப்பு – நினைவின் தாழ்வாரங்கள் – விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010), கண்ணதாசன் இலக்கியவிருது – கோவை – 2012

திருப்பூர் தமிழ்ச்சங்க விருது – உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012, கவிஞர் தேவமகள் இலக்கிய விருது, கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது, வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பட்டயம் மற்றும் கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது – 2017, திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி வழங்கும் “அறிஞர் போற்றுதும்” விருது -2017, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் விருது – 2017[1]( அக்டோபர் 12, 2018 அன்று வழங்கப்பட்டது) கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் பட்டயம் மற்றும் “ஜெயகாந்தன் விருது” – 2018, அமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு’ அமைப்பு வழங்கும் பட்டயம் மற்றும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2019, பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் பாலகுமாரன் இலக்கிய விருது ஆகிய விருதுகள் இவரது படைப்புகளுக்கு மணிமகுடம் சூட்டுகின்றன.

கவிஞர் கலாப்ரியா அவர்களின் நேர்காணலைக் கண்டுகளிக்க அமெரிக்கத் தமிழ் ஊடகத்துடன் இணைந்திருங்கள்.

இந்திய நேரப்படி காலை 7.00 மணி (ஆகஸ்ட் 8, ஞாயிறு 7.00 AM IST)

அமெரிக்க கிழக்கு நேரம் ஆகஸ்ட் 7, சனிக்கிழமை இரவு 9.30 மணி

பசிபிக் நேரம் ஆகஸ்ட் 7, சனிக்கிழமை இரவு 6.30 மணி

Zoom Meeting ID: 87316043344 அல்லது
http://Tamilmedia.org/events வழியாக

வாய்ப்புள்ளவர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும்!

படைப்பாளர் உலகம்,
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Details

Date:
August 7
Time:
6:30 pm - 7:30 pm PDT
View Event Website

Organizer

American Tamil Media
Email:
info@tamilmedia.org
View Organizer Website